விடாமுயற்சி
கடலோரம். அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி. குருவும் அவரது
சீடர்களும் காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
''உனக்கு என்ன தெரிகிறது?'' 'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில்
விடாமுயற்சி தெரிகிறது.' அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப்
போகும்.' குரு சொன்னார், ''சில
நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு.''
நிழல்
நான் மாறும் போது தானும் மாறியும் நான் தலை அசைக்கும் போது தானும் தலை
அசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்.
தெளிவு
தண்ணீர் தெளிவானது. கண்ணாடி தெளிவானது. அதே போல் தான் மனமும்..தண்ணீரில்
அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும் படிந்தால் தெளிவற்ற தன்மை
ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போது தான் அடுத்தவரைப் பார்த்து
சிரிக்கத் தோன்றும். தெளிவு வந்து விட்டால் தன்னைத்தானே பார்த்து
சிரிக்கிறவர்களாகி விடுவோம். நம்முடைய அகந்தையில் செய்யப்படுகின்ற
காரியங்களும்
முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.
நான் எங்கே?
நண்பனே. என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்? நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை. என்னை உண்மையில் தேடினால் ஒரு
கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய். நான் உன் நம்பிக்கையில்
இருக்கிறேன் நண்பனே! ---கபீர்தாசர்
மதிப்பு
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு சிதற விட்ட நமக்குத் தெரியாது. அதை
எடுத்துச் செல்லும் எறும்புக்குத் தான் தெரியும்.